தென்னாப்பிரிக்கா, டிசம்பர் 07 (பெர்னாமா) -- தென்னாப்பிரிக்க நகரமான பிரிட்டோரியாவில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விடுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் மூன்று வயது சிறுவன் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலை நடத்திய அடையாளம் காணப்படாத மூன்று சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இச்சம்பவத்தின் போது மேலும் 14 பேர் காயமடைந்ததாக போலீசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு, மதுபான விடுதிக்கு உள்ளே அல்லது வெளியே நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
உலகிலேயே அதிக கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்படும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும்.
அந்நாட்டில் சராசரியாக நாளொன்றுக்கு 60 கொலை சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)