Ad Banner
Ad Banner
 பொது

தொடர் மழைக்கான எச்சரிக்கை அறிவிப்பை மெட்மலேசியா மீட்டுக்கொண்டது

29/11/2025 04:50 PM

கோலாலம்பூர், நவம்பர் 29 (பெர்னாமா) -- பல மாநிலங்களில் விடுக்கப்பட்டிருந்த தொடர் மழைக்கான எச்சரிக்கை அறிவிப்பை மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா மீட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, திரெங்கானுவில் உள்ள கோலா திரெங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் ஆகிய பகுதிகளில் ஆபத்தான அளவிலான மழை எச்சரிக்கையை மெட்மலேசியா வெளியிட்டிருந்தது. 

மேலும்,  பகாங்கில் ஜெராண்டுட் மற்றும் குவாந்தான், திரெங்கானுவில் பெசுட், செத்தியு, கோலா நெருஸ் மற்றும் உலு திரெங்கானு ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உட்பட  கிளந்தான், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலும்  விடுக்கப்பட்ட தயார்நிலை எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)