ஐரோப்பா, நவம்பர் 29 (பெர்னாமா) -- ஐரோப்பாவின் ஏர்பஸ் (AIRBUS) நிறுவனம், தனது சுமார் 6,000 விமானங்களில் உடனடியாகச் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று அறிவித்துள்ளது.
A320 ரக விமானங்களின் மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
கடுமையான சூரிய கதிர்வீச்சு விமானக் கட்டுப்பாடுகளின் செயல்பாட்டிற்கு முக்கியமான தரவுகளை சிதைக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதால் மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏர்பஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி ஜெட்புளு (JETBLUE) நிறுவனத்தின் A320 விமானம் ஒன்று கட்டுப்பாட்டுக் கோளாறு காரணமாகத் தரையிறங்கியதை தொடர்ந்து, ஏர்பஸ் நிறுவனம் A320 விமானங்களில் இந்த மாற்றங்களை செய்ய முன்வந்துள்ளது.
இந்த அறிவிப்பினால் பயணிகள் மற்றும் விமான சேவைக்கு இடையூறுகள் என்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கான விமானங்களின் வன்பொருளும் மாற்றப்படலாம் என்பதால், பல வாரங்கள் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனமான ANA ஹோல்டிங்ஸ், தனது ஏர்பஸ் A320 விமானங்களை உட்படுத்திய 65 விமான பயணங்களை ரத்து செய்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)