Ad Banner
 பொது

கினபாதாங்கான், லாமாக் இடைத்தேர்தல்கள்; தேசிய முன்னணியின் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து

25/01/2026 03:39 PM

கோலாலம்பூர், 25 ஜனவரி (பெர்னாமா) --  நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதில் தேசிய முன்னணி அடைந்த வெற்றிக்கும், தொகுதியின் புதிய பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹமட் குர்னியாவான் நயிம் மொக்தார் மற்றும் முஹமட் இஸ்மாயில் அயோப்  ஆகியோருக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.

சேவை மற்றும் அர்ப்பணிப்பு மீதான மக்களின் தொடர்ச்சியான நம்பிக்கையை, கினபாதாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு தேசிய முன்னணி அடைந்த வெற்றி பிரதிபலிப்பதாக, அவர் கூறினார்.

தேசிய முன்னணியின் வெற்றியை மக்களின் நம்பிக்கையாக பொறுப்புணர்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, தமது அதிகாரப்பூர்வ முகநூலில் அன்வார் பதிவிட்டுள்ளார்.

சபா மாநிலத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தவும், மக்களின் நல்வாழ்வைத் தொடர்ந்து பராமரிக்கும் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமை உணர்வை மடானி அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)