Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சபா: வெள்ளத்தை எதிர்கொள்ள எஸ்.பி.ஆர்-இன் எஸ்.ஓ.பி

28/11/2025 06:29 PM

சபா, நவம்பர் 28 (பெர்னாமா) -- சபாவில் தற்போது நிலவி வரும் எதிர்பாராத வானிலையைத் தொடர்ந்து, வெள்ளம் உள்ளிட்ட எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள, தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி-யை உருவாக்கியுள்ளது.

அதோடு, தற்போதைக்கு, கூடுதல் வாக்களிப்பு நேரம் வழங்கப்படாது.

இருப்பினும், வானிலை மிகவும் மோசமடைந்தால், 17-வது சபா மாநில தேர்தல் செயல்முறையை ஒத்திவைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்துவதற்கோ
எஸ்.பி.ஆர்-க்கு அதிகாரம் உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

''நிலைமை மிகவும் மோசமடைந்து, பெரும்பாலான பகுதிகள் வெள்ளம், கடுமையான நிலச்சரிவு போன்ற சூழ்நிலைகளில் இருந்தால், அதற்கு தொடர்புடைய எஸ்.ஓ.பி-களும் எங்களிடம் ஏற்கனவே உள்ளன. எதிர்பாராத வானிலைக் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறோம். மேலும், எந்த வகையான பேரிடரும் ஏற்படும் வாய்ப்பை முன்னிட்டு தேவையான தயாரிப்புகளைச் செய்ய, நேற்று நாங்கள் மெட்மலேசியா மற்றும் நட்மா-உடன் கலந்துரையாடலையும் நடத்தினோம்,'' என்று டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் கூறினார்.

இன்று, துவாரானில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரம்லான் ஹருன் அவ்வாறு கூறினார்.

அமலாக்கத் தரப்பினருடன் இணைந்து, மாவட்ட அதிகாரி தலைமையிலான மாவட்ட பேரிடர் செயற்குழுவின், அண்மைய அறிக்கையை அடிப்படையாக கொண்டு அந்த SOP செயல்படுத்தப்படும் என்றும் அவர் விவரித்தார்.

அதே வேளையில், மெட்மலேசியாவின் கணிப்பின்படி, சனிக்கிழமை பிற்பகலில் கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வாக்காளர்கள் காலை நேரத்திலேயே வாக்களிக்க வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)