ஹட் யாய், நவம்பர் 23 (பெர்னாமா) -- தாய்லாந்து ஹட் யாய் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹட் யாய் நகராட்சி அவசரநிலையை அறிவித்து, சிவப்பு நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பல சுற்றுப்புறங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இணையச் சேவை மற்றும் குழாய் நீர் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால்பல குடியிருப்பாளர்கள் குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்திருந்தாலும், ஹட் யாய் அனைத்துலக விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சில இடங்களில் தண்டவாள மட்டத்திற்கு மேல் தண்ணீர் உயர்ந்ததால், தாய்லாந்து மாநில ரயில்வே, தெற்கு செல்லும் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)