Ad Banner
 பொது

44 ஆண்டுகளாக மாணவர்களின் கனவுளுக்கு வழிகாட்டி வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்

19/01/2026 06:56 PM

கோலாலம்பூர், ஜனவரி 19 (பெர்னாமா) -- கல்வியில் குறிப்பாக இந்திய மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல அமைப்புகளும் தனி நபர்களும் இடைவிடாது பாடுபட்டு வருகின்றனர். கல்வி முன்னேற்றமே அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முதன்மை அடித்தளமாகும்.

அத்தகைய தளத்தை உருவாக்கும் நோக்குடன் செயல்படும் அமைப்புகளில் கடந்த 44 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஶ்ரீ முருகன் கல்வி நிலையம். ஒவ்வொரு மாணவரின் கனவுகளையும் நனவாக்க அவர்களின் திறமைகளை வளர்த்து நம்பிக்கையுடன் முன்னேற வழிகாட்டுவதில் சிறப்பான பங்காற்றி வருகிறது.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் நேரடி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் மட்டுமின்றி தொழில்நுட்ப முன்னேற்றங்களை கல்வியுடன் இணைத்து மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்குவதில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் முன்னோடியாக விளங்குகிறது.

அந்த வகையில் “பிரம்மாஸ்திரா” என்ற நவீன இலக்கவியல் கல்வி தளம் மாணவர்களின் கற்றலை எல்லையற்றதாக மாற்றி மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான பாதையை அமைக்கும் ஒரு சக்தி வாய்ந்த கல்வி தளமாக அமைக்கப்பட்டிருப்பதாக ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

''இந்த இணைய கல்லி ஒரு மாணவனின், தனிதிறமை, கல்வி அறிவு முற்றும் அம்மாணவனின் நடத்தையை அனைத்தையும் மதிப்பிடடு கண்காணிக்க ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் பிரம்மாஸ்திரா எனும் ஒரு இலக்கவியல் தளத்தை உருவாக்கினோம். இது ஒவ்வொரு மாணவனுக்கும் தகுந்த மற்றும் ஏற்ற சிறப்பான கல்வி கேள்விகளை பிரம்மாஸ்திரா இலக்கவியல் தளம் செய்யும் ஆற்றல் கொண்டது.''

அதுமட்டுமின்றி, அனைத்தையும் நேரடி வகுப்புகள் மூலம் வழங்குவது சவாலானதாக இருந்தாலும் “பிரம்மாஸ்திரா” இலக்கவியல் கல்வி தளத்தின் மூலம் அந்த தடைகளை உடைத்து நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் தரமான கல்வியை எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்பதை அக்கல்வி நிலையத்தின் தேசிய இலக்கவியல் ஒருங்கிணைப்பாளர் இராஜேஸ்வரி இராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

''இந்த இலக்கவியல் தளம், செயற்கை நுண்ணறிவு, தேசிய புவியியல் , எஸ்.டி.இ.எம், பொறியியல், மொழியியல் தொடர்பான, இலக்கவியல் தேர்விகள் இந்த தளத்தில் உண்டு. இது நேரடியாக அனைத்து மாணவர்களுக்கும் தருவது சாத்திய பாடாது. அதேவேளையில், இணையத்திற்கு இந்த தளத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் சக்தி உண்டு''

இதனிடையே, கல்வி கற்பதற்கு தூரம் ஒரு தடையல்ல என்பதை மனதில் கொண்டு சிரமம் பாராமல் தனது மகனை ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு அனுப்புவதாகவும் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சியை அவர் பெற வேண்டும் எனும் தமது ஆசையை ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் நிறைவேற்றும் என்று தம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அமுதா ராமா தெரிவித்தார்.

''தூரமாக இருந்தாலும், வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி, எம் மகனை இந்நிலையத்தில் சேர்த்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்து, எஸ்.பி.எம் தேர்வில் நல்ல தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்''

கல்வியைத் தவிர்த்து மாணவர்களின் தனிப்பட்ட திறன்கள் ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வளர்த்து வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)