பாச்சோக், 22 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, கிளந்தான் பாச்சோக்கில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் அந்த PPS-இல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை ஜே.கே.எம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, தாவாங் கம்போங் பூடியின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தால் சூழ்ந்திருப்பதும் சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்க தொடங்கியிருப்பதும் பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தின் வழி தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து உட்பட தினசரி இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உறுப்பினர்கள் வாகனங்களுடன் அப்பகுதியில் தயார் நிலையில் உள்ளனர்.
வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)