Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து; காலிறுதிக்கு முன்னேறியது மலேசியா

20/11/2025 06:47 PM

சிட்னி, 20 நவம்பர் (பெர்னாமா) -- 2025 ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு மலேசியா முன்னேறியுள்ளது.

கலப்பு இரட்டையரான சென் தாங் ஜீ-தோ ஈ வேய் ஜோடி தைவான் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தது

சிட்னி ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில், உலகத் தர வரிசையில் நான்காம் இடத்தில் உள்ள சென் தாங் ஜீ-தோ ஈ வேய் ஜோடி தைவானின் லியூ குவாங் ஹேங்-ஜேங் யூ ஜோடியைத் தோற்கடிப்பதில் எவ்வித சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை.

21-16, 21-14 என்ற நேரடி செட்களில் 30 நிமிடங்களில் தங்களின் வெற்றியை உறுதி செய்த மலேசியா காலிறுதியில் தைவானின் மற்றுமொரு ஜோடியுடன் களம் காணவுள்ளது.

அதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவில், தைவான் போட்டியாளர்களை வீழ்த்திய கோ ஸீ ஃபேய்-நூர் இசுட்டின் ரும்சானி ஜோடியும் வெற்றிகரமாக காலிறுதிக்கு முன்னேறியது.

21-23, 21-17 மற்றும் 21-10 என்ற நிலையில் கடும் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் இதில் வெற்றிப் பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)