கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- மாநிலங்களுடன் நல்லுறவைப் பேணுவதும் ஏற்படும் எந்தவொரு முரண்பாடுகளையும் தீர்க்க முயற்சிப்பதும் மத்திய அரசாங்கத்தின் தற்போதைய பொறுப்பு என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
''ஏதாவது நியாயமான மனக்கவலைகள் இருந்தால், நாம் அதை செவிமடுத்துத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். மேலும், பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ய தயாராக இருக்கும் தரப்பினரும் உள்ளனர். அதனால், நல்லுறவைக் கொண்டிருந்தால், பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
பேச்சுவார்த்தைச செயல்முறை அல்லது பிரச்சனைகளைத் தீர்க்கும் நடைமுறை நாட்டின் ஒற்றுமையும் இணக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)