Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

மத்திய கிழக்கு மோதல்; 41 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

13/03/2026 03:50 PM

நியூ யார்க் , 13 மார்ச் (பெர்னாமா) -- தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், ஈரான், லெபனான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 41 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் நாட்டிற்குள்ளேயே  இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளரின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டெபான் டுஜாரிக் நேற்று கூறினார்.  

"அதோடு, ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் வேறொரு நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக, UNHCR எனப்படும் ஐ.நா அதிகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் புள்ளி விவரங்களை Dujarric மேற்கொள் காட்டினார். ஈரானில் மட்டும், யுன்.என்.எச்.சி.ஆர்- இல் உள்ள எங்கள் சகாக்கள் கூறுகையில், தற்போதைய மோதலின் விளைவாக 6 லட்சம் முதல் 10 லட்சம் ஈரானிய குடும்பங்கள் தற்காலிகமாக தங்கள் நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர்," என்றார் அவர்.

உலகளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் அதிக எண்ணிக்கையிலான மக்களை மத்திய கிழக்குப் பகுதி  கொண்டிருப்பதாக UNHCR ஊழியர்கள் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காலமாக, அப்பகுதியில் நிலவும் மோதல்கள் பொதுமக்கள் மத்தியில் துன்பத்தை அதிகரிப்பதோடு, பலவீனமான மக்களின் உள்கட்டமைப்பிற்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக, அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

8 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தவர்களாக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளதை, லெபனானில் உள்ள அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதில் சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் குழந்தைகளும் அடங்குவதாகவும், ஏறக்குறைய 600 மையங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருப்பதாகவும்  டுஜாரிக் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)