Ad Banner
Ad Banner
 பொது

மாற்றத்தை எதிர்கொள்ளும் சபா மக்களின் முடிவை மத்திய அரசாங்கம் மதிக்கிறது 

30/11/2025 02:23 PM

கோலாலம்பூர், நவம்பர் 30 (பெர்னாமா) -- சபா மாநில மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மீண்டும் அம்மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோருக்கு  பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது  வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டார். 

கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளால் ஏற்பட்ட அநீதி மற்றும் புறக்கணிப்பிற்குப் பின்னர், மாற்றத்தை எதிர்கொள்வதில் மாநில வாக்காளர்கள் தெளிவாக இருந்தததை இத்தேர்தல் முடிவு காட்டுவதாகக் கூறிய அவர், இம்முடிவை மத்திய அரசாங்கம் மதிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அடையப்பட்டதைப் போல, சபா மக்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காக மடானி அரசாங்கம் தொடர்ந்து போராடும் என்றும் இன்று தமது முகநூல் பதிவில் பிரதமர் உறுதி தெரிவித்திருந்தார்.

இக்குறுகிய காலத்தில், சபாவின் நலன்களைப் பாதிக்கும் உரிமைகோரல்கள் மற்றும்  மரபுவழியாக வரும்  பிரச்சனகளைக் களைய மடானி அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அப்பதிவில் தெளிவுபடுத்திய பிரதமர், MA63 எனப்படும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் தொடர்பில் சில உறுதியான முன்னேற்றமும் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே,சபா ஒரு வளமான, சமத்துவமான மாநிலமாக மாறுவதையும், இனியும் அது புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய மடானி அரசாங்கம்  உதவும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)