Ad Banner
 விளையாட்டு

சீனா பொது ஸ்குவாஷ்; இரண்டாம் சுற்றில் மலேசியா

12/11/2025 06:48 PM

பாகிஸ்தான், 12 நவம்பர் (பெர்னாமா) -- சீனா பொது ஸ்குவாஷ் போட்டி.ஷங்காய்யில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மலேசியா வெற்றிகரமாக இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது 

ரேச்சல் அர்னால்ட், ஹஃபிபா அஸ்மான் மற்றும் ஐரா அஸ்மான் ஆகிய நாட்டின் மூன்று போட்டியாளர்களும் தத்தம் எதிராளிகளை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தனர்.

ஹாங்காங் போட்டியாளரான டோங் ட்ஸ் விங்கை 7-11, 11-7, 11-6, 12-10 என்ற செட்களில் தோற்கடித்த ரேச்சல் அர்னால்ட் அடுத்த சுற்றில் பெல்ஜிய வீராங்னையை எதிர்கொள்வார்.

அதேபோல, சக நாட்டவருக்கு எதிராக விளையாடிய ஐரா அஸ்மான் 11-6, 13-11, 11-7 எனும் நிலையில் அடுத்ததாக் எகிப்திய வீராங்னையுடன் மோதுவார்.

இதனிடையே, ஹஃபிபா அஸ்மான் 11-9,11-2,11-7 என்ற புள்ளிகளில் அயர்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)