Ad Banner
 பொது

குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து மட்டுமே இயங்க விரைவு பேருந்து நிறுவனங்களுக்கு கட்டாயமில்லை

11/11/2025 06:28 PM

சிலாங்கூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர் டி.பி.எஸ் பேருந்து முனையம் அல்லது கோம்பாக் பேருந்து முனையம் டி.பி.ஜி-இல் இருந்து மட்டுமே இயங்குவதற்கு ஏரோலைன் போன்ற விரைவு பேருந்து நிறுவனங்களை அரசாங்கம் ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெளிவுப்படுத்தினார்.

எனினும், அப்பேருந்து நிறுவனங்கள் பாதுகாப்பான உரிமம் பெற்ற முனையப் பகுதியிலிருந்து தங்கள் சேவையை இயக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

''இல்லை என்பதே பதில். நாங்கள் யாரையும் டி.பி.எஸ் அல்லது டி.பி.ஜி-க்கு செல்ல கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் ஒரு பாதுகாப்பான பகுதியிலிருந்து உரிமம் பெற்ற பகுதியிலிருந்து ஒரு முனையமாக செயல்பட வேண்டும். மேலும் முனையமாக மாறுவதற்கான செயல்முறையை நாங்கள் எளிதாக்குவோம். இதை பேரங்காடிகள் செய்ய வேண்டும். அவர்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். முனையத்திற்கு உரிமம் வழங்க அவர்களுக்கு உதவ நாங்கள் அவர்களை அணுகுகிறோம். எளிதாக உதவ நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம்,'' என்றார் அந்தோனி லோக்.

ஏரோலைன் நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்தப் புகாரைத் தொடர்ந்து நேற்று தாம் அவர்களைச் சந்தித்ததாக லோக் கூறினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை