கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளை பணியமர்த்துவதில் உள்ள சிக்கல்களுக்கு ஓராண்டிற்குள் தீர்வு காண சுகாதார அமைச்சு நிகழ்நேர கண்காணிப்பு முறையை உருவாக்கும்.
சுகாதாரப் பணியாளர்களின் உண்மையான தேவைகள் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதற்கும், நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் பணியமர்வில் உள்ள சமநிலையின்மை சிக்கலைக் கையாள்வதற்கும் இந்நடவடிக்கை முக்கியமானது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.
அனைத்து சுகாதார வசதிகளிலும் உண்மையான ஆள்பல தேவைகளை மதிப்பிடுவதற்குப் பொறுப்பான மனித மேம்பாட்டு பிரிவு மற்றும் இலக்கவியல் சுகாதார பிரிவின், திட்டமிடல் பிரிவுடன் இணைந்து இந்த நிகழ்நேர கண்காணிப்பு முறை உருவாக்கப்படவிருப்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
"ஒன் கோள்" மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைத்து, நோயாளி சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்க, அரசாங்க சிகிச்சையகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தானியங்கிமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளிட்ட இலக்கவியல் சுகாதார மாற்றத்தையும் அமைச்சு செயல்படுத்தி வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)