புத்ராஜெயா, 11 நவம்பர் (பெர்னாமா) -- அமைச்சரவை மாற்றம் அல்லது உறுப்பினர்களை நியமனம் என்பது பிரதமரின் முழுமையான அதிகாரமாகும்.
அதுமட்டுமின்றி, அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான விவகாரங்கள் அமைச்சரவை கூட்டத்தில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
''அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஒருபோதும் எந்த விவாதமும் நடைபெற்றதில்லை. ஒருபோதும் இல்லை. அது பிரதமரின் முழுமையான அதிகாரம். அமைச்சரவை மாற்றம் செய்யவும், யார் அமைச்சராக அல்லது துணை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கவும் அவருக்கே முழு அதிகாரம் உள்ளது என்றார்,'' டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி.
இன்று, புத்ராஜெயாவில் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த ஆருடங்கள் தொடர்பில் டாக்டர் அஹ்மட் சாஹிட் செய்தியாளர்களிடம் அவ்வாறு கருத்துரைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)