மெக்சிகோ, 11 நவம்பர் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தவிருக்கின்றன.
அதில், மெக்சிக்கோ தலைநகரில் 13 போட்டிகள் நடத்தப்படும் வேளையில் இதர போட்டிகள் Guadalajara மற்றும் மொந்தேரியில் நடைபெறவிருக்கின்றன.
ஜூன் 11-ஆம் தேதி அதன் தொடக்க விழா மெக்சிகோ நகரில் நடைபெறும் நிலையில் இறுதிப் போட்டி ஜூலை 19 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறும்.
உலக் கிண்ணப் போட்டிக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் ஜூன் குறித்த நேரத்திற்குள் முடிக்கப்படும் என்று மெக்சிகோ அதிபர் ஷெயின்பவும் நேற்று தெரிவித்தார்.
இந்த மாபெரும் போட்டியில் பாதுகாப்பு குறித்து அனைத்துலக காற்பந்து சம்மேளனமாக பீஃபா நம்பிக்கையுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பீஃபா அதனை
உறுதி செய்வதில் பணியாற்றி வந்திருப்பதாக அதன் மெக்சிகோ இயக்குநர் ஜுர்கேன் மயின்கா தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக இந்தப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இதனால் இது வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் 39 நாட்கள் நீடிக்கும் விளையாட்டுத் திருவிழாவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)