Ad Banner
Ad Banner
 பொது

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்ததில்லை - பிரதமர்

11/11/2025 06:05 PM

கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- மக்களவைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதை ஒருபோதும் தவிர்த்ததில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை நடைபெறும் மக்களவைக் கூட்டத்தின்போது அமைச்சர்களின் கேள்வி நேரத்தில் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தாம் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மூலமாகப் பதிலளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

இருப்பினும் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதே கேள்வியை மீண்டும் எழுப்பி வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், பிரதமர் பதிலளிக்க தவிர்த்து விட்டார். பலமுறை இரண்டு முறை நான் பதிலளித்து விட்டேன். பின்னர் மித்தி அமைச்சும் பதிலளித்தது. நிறைவு விவாதத்திலும் பதிலளிக்கப்பட்டது. கேள்வி எழுப்புவதன் அதிகாரத்தைப் பற்றிய விவாதம் இது. அது அவருடைய கேள்வி. ஆனால் தற்போது அதை ஒரு பிரச்சனையாக மாற்ற விரும்புகிறார். பிரதமர் எனக்கு பதிலளிக்க பயப்படுகிறார். அது என் பொறுப்பு என்றால் நான் பயப்பட மாட்டேன். நான் அதை எளிதாக எதிர்கொள்ள வேண்டும் கடினமாக அல்ல அதுதான் முதன்மையானது.

முன்னதாக, அமைச்சர்களின் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னர் இன்றைய அங்கத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகள் இடம்பெறவில்லை என்று பெரிக்காதான் நேஷ்னல் தலைவர் டத்தோ ஶ்ரீ தாக்கியுட்டின் ஹஸ்சான் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)