Ad Banner
Ad Banner
 பொது

மக்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்கள் எதிர்க்கப்பட வேண்டும்

09/11/2025 04:58 PM

கோலா கங்சார், 09 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் அனைத்து செயல்களும் உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்.

இனம், மதம், மாநிலம் மற்றும் வட்டாரம் ஆகியவற்றை பிரச்சனையாக மாற்றக்கூடிய பலர் இருப்பதால், அவர்களின் அத்தகைய செயல் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு நிச்சயம் ஒரு தடையாக இருக்கும் என்று பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.

''முந்தைய தலைவர்கள் உருவாக்கிய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும் புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் இருக்கின்றோம். இந்த நாட்டை சர்ச்சை நிறைந்த வீடாகவும், அதிகார போதையில் இருப்பவர்களுக்கான விருந்து இடமாகவும் மாற்றக்கூடாது,'' என்றார் அவர்.

இன்று, பேராக், கோலா கங்சாரில் உள்ள இஸ்தான் இஸ்கண்டாரியாவில் தமது 69-வது பிறந்தநாள் விழாவை ஒட்டிய நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுல்தான் நஸ்ரின் அவ்வாறு கூறினார்.

வேறுபாடுகளை எதிர்மறையான கண்ணோட்டத்தில் அணுகினால், அவை மக்கள் மத்தியில் பாரபட்சம், உறவுகளில் சீர்குலைவு உட்பட இனம் மற்றும் மதங்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)