சவூதி அரேபியா, 6 நவம்பர் (பெர்னாமா) -- AFC 2 வெற்றியாளார் லீக் கிண்ண காற்பந்துப் போட்டி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப், 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் இந்தியாவின் கோவே FC-யைத் தோற்கடித்தது
சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், அல்-நஸ்ர் கிளப்பின் முன்னணி நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கவில்லை.
ஆனால், அது கிளப்பின் வெற்றிக்கு எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை.
முதல் பாதி ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அவ்வணியின் முதல் கோல் போடப்பட்டது.
எஞ்சிய மூன்று கோல்கள் இரண்டாம் பாதியில் அடிக்கப்பட்டன.
அதில் இரு கோல்களை அப்துல்ரஹ்மான் காரீப் போட்டார்.
இதன் வழி, குழு நிலை போட்டியின் நான்கு ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ள Al-Nassr, 12 புள்ளிகளுடன் ‘D’ குழுவில் முதலிடத்தை உறுதிசெய்துள்ளது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)