Ad Banner
 பொது

அம்ரி & ரேமண்ட் கோ வழக்கில் நஷ்ட ஈடு; தீர்ப்புக்கு எதிராக ஏஜிசி மேல்முறையீட

06/11/2025 05:52 PM

கோலாலம்பூர், 6 நவம்பர் (பெர்னாமா) -- சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் பாதிரியார் ரேமண்ட் கோ காணாமல் போன வழக்கு தொடர்பில் அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று...

உத்தரவிடப்பட்ட கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் ஏ.ஜி.சி மேல்முறையீட்டு விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளது.

அந்த இரு நபர்களும் காணாமல் போன வழக்கில், போலீசாரும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ சூ தியாங் ஜோ தீர்ப்பளித்திருந்தார்.

அத்தீர்ப்பு எதிராக மேல்முறையீட்டு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதாக ஏ.ஜி.சிஇன்று வெளியிட்ட இரு தனித்தனி அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும்.

2016-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி, அம்ரியும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி ரேமண்ட் கோ காணாமல் போனாதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

அம்ரியின் மனைவி நொர்ஹயாத்தி முஹமட் அரிஃபிற்கு இழப்பீட்டு தொகையுடன் சேர்த்து வட்டி உட்பட மொத்தமாக 33 லட்சம் ரிங்கிட் நஷ்டயீட்டை அரசாங்கம் வழங்கும்படி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அதேபோல் ரேமண்ட் கோவின் மனைவி சுசன்னா லியுவிற்கு 3 கோடியே 70 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேலாக அரசாங்கம், நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)