சிலாங்கூர், 5 நவம்பர் (பெர்னாமா) -- கிரேக்கம், ஏதென்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஹெலனிக் வெற்றியாளர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முன்னேறினார்.
இன்று காலை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் அவர் சிலியின் அலெஜான் ரோ டபிலோ-வை நேரடி செட்களில் வீழ்த்தினார்.
அலெஜான் ரோ டபிலோ உடனான முதல் செட் ஆட்டத்தை சற்று போராட்டத்துடன் தொடங்கிய நோவாக் ஜோகோவிச் 7-6 எனும் நிலையில் அதனை முடித்தார்.
ஆனால், இரண்டாம் செட் ஆட்டத்தை ஜோகோவிச் 6-1 என்று மிக எளிதில் வென்றார்.
24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் 38 வயதான ஜோகோவிச், நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் போர்த்துகலின் நுனோ போர்கேஸ்சைத் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, சவூதி அரேபியா ரியாத்தில் நடைபெறும் WTA குழுநிலை டென்னிஸ் போட்டியில் உலகின் முதன் நிலை வீராங்கனையான அரியானா சபலென்கா 6-4, 2-6 மற்றும் 6-3 எனும் நிலையில் ஜெசிக்கா பெகுலாவைத் தோற்கடித்துள்ளார்.
அமெரிக்க வீராங்கனையான பெகுலா திறம்பட விளையாடினாலும் அவரை முன்னேற விடாமால் தடுத்து நிறுத்தி சபலென்கா வெற்றிகரமாக இறுதி சுற்று ஆட்டத்திற்கு முன்னேறினார்.
இந்த வார இறுதியில் நடைபெறும் தனது இறுதி குழுநிலை போட்டியில் சபலென்கா கோகோ காஃப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)