Ad Banner
 பொது

ஜோகூர் ஆற்றின் மாசுபாடு; புகார்கள் அதிகரித்துள்ளன

05/11/2025 04:23 PM

ஜோகூர் பாரு, 5 நவம்பர் (பெர்னாமா) --  இதனிடையே, ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள ஆற்றின் மாசுபாடு குறித்து மாநில போலீஸ் இதுவரை ஏழு புகார்களைப் பெற்றுள்ளதாக டத்தோ ஏபி ரஹாமான் அர்சாட் தெரிவித்தார்.

சுரங்க உரிமையாளர் மற்றும் பாதிக்கப்பட்ட மூன்று கிராமவாசிகள் சம்பந்தப்பட்ட நான்கு புதிய புகார்கள் நேற்று பெறப்பட்டதாக மாநில போலீஸ் தலைவரான அவர் குறிப்பிட்டார்.

''மொத்தமாக, அக்டோபர் 31- ஆம் தேதி முதல் இதுவரை ஏழு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஒன்று ரன்ஹீல் எஸ்.ஏ.ஜே நிறுவனத்திலிருந்தும் மேலும் இரண்டு புகார்கள் குடியிருப்பாளார்களிடம் இருந்து பெறப்பட்டது,'' என ரஹாமான் அர்சாட் கூறினார்.

மாநில சுற்றுச்சூழல் துறை ஜே.எஸ் மற்றும் தேசிய நீர் சேவை ஆணையம் எஸ்.பி.ஏ.என் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு போலீசாரும் உதவி செய்வதாக அவர் தெரிவித்தார்.

பெர்னாமா  

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)