பாகிஸ்தான், 3 நவம்பர் (பெர்னாமா)-- பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் காற்று மாசுமாடு அதிகமாக இருப்பதோடு, அது உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரமாக பட்டியலிடப்பள்ளது.
நேற்று, லாகூரில் காற்றின் தர குறியீடு 237-ஆக பதிவாகியதை சுவிட்சர்லாந்து கண்காணிப்பு குழு IQAir உறுதிப்படுத்தியது. எனினும், அந்த காற்றின் தர குறியீடு மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக IQAir குறிப்பிட்டது.
இந்நிலையில் இலவச பொது போக்குவரத்தை ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நகரம் முழுவதும் புகைமூட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் நியாயமற்ற முறையில் செயல்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)