கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்மை இன்று இஸ்தான் புக்கிட் துவாங்குவில் சந்தித்தார்.
நடைபெற்று முடிந்த 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முடிவுகள் குறித்து விளக்கமளிக்க இச்சந்திப்பு நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 26 தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் 80 ஆவணங்கள் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்த ஆவணங்களில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உடனான ஆசியான் தலைவர்களின் கூட்டு அறிக்கைகளும் அடங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)