பண்டார் சன்வே, 30 அக்டோபர் (பெர்னாமா) -- தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ முஹமாட் அட்லான் பெர்ஹான் மற்றும் அவரின் வழக்கறிஞர் மன்சூர் சாட்டைக் கண்டுபிடிப்பதற்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம்மின் முயற்சி உள்துறை அமைச்சின் ஒத்துழைப்பின் மூலம் இன்னும் தொடர்கிறது.
எனினும், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளின் சட்டங்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அவ்விருவரையும் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தடைகளை எதிர்கொள்வதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர்
டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
"இன்டர்போல் உடன் ஒத்துழைப்பு உள்ளது. மேலும் பல நாடுகள் உள்ளன. சில நாடுகளிடம் இன்டர்போல் இருந்தாலும் உதவி வழங்க முடியாது. ஏனெனில் நான் குறிப்பிட விரும்பாத நாடுகளில் ஒன்று அவர்கள் மீது நாம் குற்றஞ்சாட்ட விரும்பும் வழக்கில் நமது சட்டத்தின்படி பிரம்படி தண்டனையை உள்ளடக்கி உள்ளது. அந்த நாட்டில் பிரம்படி தண்டனை இல்லையென்றால் அவர்கள் நமது குற்றவாளிகளுக்கு பாரம்பரியத்தின் அடிப்படையில் உதவி வழங்க முடியாது. அதாவது அவர்களைக் கண்டுபிடிப்பதில் அவர்களால் உதவி வழங்க முடியாது," என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறுனார்.
இன்று பண்டார் சன்வேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி செய்தியாளர்களிடம் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)