பெட்டிட்-கோவே, 30 அக்டோபர் (பெர்னாமா) -- மெலிசா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஹைத்தியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
இப்பேரிடரில் 18 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் பெட்டிட்-கோவே நகரில் வசிப்பவர்கள்.
அந்நகரில் புயலினால் 80 வீடுகள் முற்றாக அழிந்ததோடு, 160-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தினால், ஹைத்தியின் தெற்குப் பகுதியில் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும், 11,600-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)