கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- கனவு நனவானது
ஆசியானில் 11-வது நாடாக திமோர் லெஸ்தே அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது குறித்து அந்நாட்டுப் பிரதமர் கே ரலா சனானா குஸ்மாவோ அவ்வாறு மகிழ்ச்சி தெரிவித்தார்.
வட்டார அளவிலான முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை நோக்கிய நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ளும் முயற்சிகளில், குடியரசு மக்களின் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை அமைந்துள்ளது என்று அவர் வர்ணித்தார்.
"இது ஒரு தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாகும், உண்மையிலேயே ஒன்றுபட்ட நாடுகளின் குடும்பம், பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான மதிப்பு நிலைகள் மற்றும் கூட்டு விதி ஆகியவற்றால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. திமோர்-லெஸ்தே அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகள், ஆசியான் தலைமைத்துவம், ஆசியான் செயலகம் மற்றும் எங்களின் பேச்சுவார்த்தைகளுக்கான ஒத்துழைப்பாளர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்," என்றார் அவர்.
இன்று தொடங்கிய 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆசியானின் உறுப்பு நாடுகளில் திமொர் லெஸ்தேவும் உறுப்பியம் பெறும் உடன்படிக்கைக்கு பின்னர் கே ரலா சனானா குஸ்மாவோ அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)