கெடா, 25 அக்டோபர் (பெர்னாமா)-- கெடா, கூலிம் மாவட்டத்தில் வசிப்பவர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டாலோ அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அபாயங்களைத் தவிப்பதற்காக தற்காலிக நிவாரண மையங்கள் பி.பி.ஸ்-க்கு உடனடியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிச்சயத்தன்மையற்ற வானிலையால் உணவு விநியோகம் துண்டிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிட்டாலும் தங்கள் வீடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி இன்னும் சில குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாக கூலிம் மாவட்ட அதிகாரி முஹமட் ரிசால் முஹமட் ரட்சி தெரிவித்தார்.
"இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைவரும் இங்கிருந்து வெளியேறு நிவாரண மையத்திற்குச் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சிலர் இங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர். இன்னும் சிலர் தங்களின் வீடுகளைப் பராமரிப்பதாகக் கூறி அங்கேயே இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன். வீடு வெள்ளத்தில் மூழ்கவில்லை என்றாலும், இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் ஆபத்தான ஒன்று என்று நான் கருதுகிறேன்." என்றார் முஹமட் ரட்சி
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)