Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஐ.பி.எப் சம்பந்தனின் துணைவியார் டத்தின் ஜெயலட்சுமி காலமானார்

25/10/2025 05:09 PM

செமினி, அக்டோபர் 25, (பெர்னாமா) -- ஐபிஎப் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் டத்தோ எம்.சம்பந்தனின் துணைவியார் டத்தின் ஜெயலட்சுமி நேற்றிரவு காலமானதாக அவரின் மகன் கணேஷ்குமார் சம்பந்தன் தெரிவித்தார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மேல் மணிக்கு மேல் எண். 5, Jalan Semenyih Mewah 15, Taman Semenyih Indah GreenVille 43500 Semenyih என்ற முகவரியில் நடைபெறும் இறுதி சடங்கிற்கு பின்னர், அன்னாரின் நல்லுடல் சிரம்பான் இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஐபிஎப் கட்சியின் முதல் தலைவரான டான் ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனின் மறைவிற்குப் பின்னர் டத்தோ சம்பந்தன் தலைவராக பொறுப்பேற்றது முதல் அனைத்து நிலையிலும் அவருக்குப் பக்கபலமாக இருந்து கட்சியை சீரிய பாதையில் கொண்டு செல்வதற்கு  டத்தின் ஜெயலட்சுமி பெரும் பங்காற்றியுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)