கோலாலம்பூர், டிசம்பர் 24 (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை உட்படுத்திய விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் தற்போது மேற்கொண்டுள்ளது.
அந்நபரை உட்படுத்திய புதிய விசாரணை அறிக்கை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இன்று பெர்னாமா தொடர்புகொண்ட போது எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அத்தலைவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பில் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அமைச்சு ஒன்றில் பணியாற்றிய போது உயர் மதிப்புள்ள அரசாங்க நிலத்தைப் பிரபலமான சொத்து மேம்பாட்டாளர் ஒருவருக்கு மாற்றி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்நபர் எஸ்.பி.ஆர்.எம் விசாரணையின் கீழ் இருப்பதாக ஊடகங்கள் முன்னதாகத் செய்தி வெளியிட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)