கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா)-- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் எந்தவொரு பொருட்சேதம் அல்லது வருமான இழப்பை அருகிலுள்ள விவசாய அலுவலகம் அல்லது தொடர்புடைய நிறுவனத்திற்குத் உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அப்புகார்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க தமது அமைச்சு தகுந்த உதவிகளை வழங்கும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் உதவிகளை வழங்கவும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசாங்கத் தரப்பு களத்தில் இறங்கியுள்ளதாக இன்று தமது முகநூல் பதிவில் முஹமட் சாபு குறிப்பிட்டிருந்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)