வாஷிங்டன் அமெரிக்கா, அக்டோபர் 21 (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், ஆசிய நாடுகளான மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் கூறியிருக்கின்றார்.
அதோடு, அவர் சீனாவுடன் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட எண்ணம் கொண்டிருப்பதாகவும் ஃயோடா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக பதற்றங்கள் இருந்தபோதிலும் அடுத்த வாரம் தென் கொரியாவில் சீன அதிபர் சீ ஜின்பிங் உடனான சந்திப்பை முன்னிட்டு டோனல் டிரம்ப் மீண்டு ஒருமுறை நம்பிக்கையுடன் பேசியிருக்கின்றார்.
மேலும், சீனாவுடன் நியாயமான ஒப்பந்தத்தை அடைய நல்லுரவைத் தொடரவும் டிரம்ப் உறுதி கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பானிஸ் உடனான சந்திப்பின் போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அக்டோபர் மாத இறுதியில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தென் கொரியாவில் சீ ஜின்பிஙை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப முன்னதாக பலமுறை கூறியிருந்தார்.
எனினும், மலேசியா மற்றும் ஜப்பானுக்கான தமது திட்டமிட்ட பயணங்களைப் பற்றி டிரம்ப் வெளிப்படையாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு இரவு:1130 (ஆஸ்ட்ரோ 502)