உத்தரப் பிரதேசம், அக்டோபர் 20 (பெர்னாமா) -- வட இந்திய நகரமான அயோத்தியின் சர்யு நதிக்கரையில் இந்தியர்கள், 26 லட்சத்துப் பத்தாயிரம் விளக்குகளை ஏற்றி தீபாவளியை வரவேற்றனர்.
அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்றும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு அவர் திரும்பியதாக அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் விளக்குகளை ஏற்றி இந்நாளைக் கொண்டாடினர்.
இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு, மெழுகுவர்த்திகளும், களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளும் ஏற்றப்பட்டதோடு, பட்டாசுகளின் வெடிக்கப்பட்டன.
கடந்தாண்டு ஏற்றப்பட்ட 25 லட்சத்துப் பத்தாயிரம் விளக்குகளைக் காட்டிலும், இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான விளக்குகள் ஏற்றி, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதற்கான சான்றிதழை, கின்னஸ் உலக சாதனைக் குழு, உத்திர பிரதேச முதலமைச்சரிடம் வழங்கியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)