பத்துமலை, ஜனவரி 23 (பெர்னாமா) -- 2019ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் 'CLEAN THAIPUSAM' பிரச்சாரம் 7வது முறையாக இவ்வாண்டும் தமது அறப்பணியை மேற்கொள்ளவிருக்கிறது.
ஆலயங்களில் சுத்தம் பேணப்பட வேண்டும், குறிப்பாகத் தைப்பூசம் போன்ற திருவிழாக்களின் போது அவ்வளாகங்களில் விட்டுச் செல்லப்படும் குப்பைகளை அகற்றி பக்தர்களுக்கு வழிபாட்டிற்கு உகந்த சுழலை உருவாக்கும் நோக்கத்தில் CLEAN THAIPUSAM செயல்பட்டு வருவதாக அதன் தோற்றுநர் விக்னேஸ்வரன் கலியப்பெருமாள் தெரிவித்தார்.
''குப்பைகளைக் கோவில் நிற்வாகம் சுத்தம் செய்துவிடும் என்று பிறரை அடையாளப்படுத்தாமல் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்று குப்பைகளைக் குப்பைத்தைட்டிகளில் போடுமவதே இப்பிரசாரத்தின் நோக்கமாகும்'' என்றார் விக்னேஸ்வரன் கலியபெருமாள்.
சமய நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடும் பொழுது ஆலயங்களின் தூய்மையைப் பராமரிப்பதை அனைவரின் கடமையாக உணர்ந்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடக்கத்தில் வெறும் 20 பேருடன் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்தில் தற்போது 600க்கும் மேற்பட்ட முகம் தெரியாத தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)