Ad Banner
 பொது

தேசிய கல்வி முறை அல்லாத பிரிவுகள்; உயர்கல்வி கழக நிபந்தனைகள் விரைவில் விவரிக்கப்படும்

23/01/2026 07:30 PM

புத்ராஜெயா, 23 ஜனவரி (பெர்னாமா) -- தேசிய கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டிராத கல்விப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது உயர்கல்வி கழகங்களில் நுழைவதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் விரைவில் விரிவாக அறிவிக்கும்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அவ்விவகாரத்தை ஆய்வு செய்யும்படி, கல்வி அமைச்சுக்கும் உயர்கல்வி அமைச்சுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

"எனவே, அதைத் தொடர்ந்து கே.பி.எம் மற்றும் கே.பி.டி தரப்புகள் அறிக்கை வெளியிடும். எனவே, அடுத்த வாரம் இரு அமைச்சும் மேலும் விரிவான தகவல்களை வழங்க ஊடகவியலாளர்களுடன் விளக்கக் கூட்டம் நடத்துவார்கள்," என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில், அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஃபஹ்மி அத்தகவல்களைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)