Ad Banner
 பொது

சட்டப்பூர்வ வழியிலே தாய்லாந்திற்கு சமையல் எண்ணெயை ஏற்றுமதி செய்ய வேண்டும்

19/10/2025 02:27 PM

கோத்தா பாரு, 19 அக்டோபர் (பெர்னாமா) - கசிவைக் குறைப்பது மற்றும் உதவித் தொகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாக உதவித் தொகை வழங்கப்படும் சமையல் எண்ணெயை சட்டப்பூர்வ வழியில் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்ய கிளந்தான் மாநில உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு கேபிடிஎன்  பரிந்துரைத்துள்ளது.

விரைந்து இலாபம் ஈட்டுவதற்காக, ஒரு சில தரப்பினர், உதவித் தொகை விலையிலான சமையல் எண்ணெயை,  அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதாக அம்மாநில கேபிடிஎன்  இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

"அது உள்ளே வருவதற்கு நான் அனுமதிக்கமாட்டோம் என்றில்லை. ஆனால் ஹலால் முறையில் அது உள்ளே வர வேண்டும். தாய்லாந்திற்கு சமையல் எண்ணெய்யை அனுப்பு வேண்டுமென்றால், அதற்காக முறையைப் பின்பற்ற வேண்டும். ஒருவேளை அது ஏற்றுமதியாக இருந்தாலும், அதற்கும் எங்களிடம் சட்டம் உள்ளது. எனவே அதை ஹலாலாகச் செய்யுங்கள். தாய்லாந்திலிருந்து அரிசியைக் கொண்டுவர விரும்பினால், அதேதான், எல்லா வரிகளையும் செலுத்துங்கள், ஹலால் முறையைப் பின்பற்றுங்கள்," என்றார் அவர்.

அண்மையில், கோத்தா பாருவில் பெர்னாமா செய்தியாளர்களை சந்தித்தபோது அஸ்மான் இஸ்மாயில் அவ்வாறு கூறினார்.

அரசாங்கம் வழங்கும் உதவித் தொகை, மலேசியர்கள் பயன்படுத்துவதற்காக மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் பாசிர் மாஸ் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் முறைகேடுகளைத் தடுக்க உள்துறை அமைச்சு இதர அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கும் என்றும் அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)