Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஆசிய வெற்றியாளர் லீக்; மலேசியா வெற்றி

22/10/2025 08:34 PM


செங்டு, 22 அக்டோபர் (பெர்னாமா) -- 2025/2026 ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நேற்றிரவு, சீனாவின் செங்டு ரோங்செங் கிளப் உடனான ஆட்டத்தில் ஜோகூரின் JDT 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றிப் பெற்றது.

பீனிக்ஸ் ஹில் விளையாட்டு பூங்கா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா சிறந்த திறனை வெளிப்படுத்தியது.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே JDTயின் முதல் கோல் ஆஸ்கார் அரிபாஸ் மூலம் அடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 11 முறை சூப்பர் லீக் வெற்றியளரான JDTயின் இரண்டாவது கோலை ஏஜர் அகெடெக்ஸ் அடித்த வேளையில் அது 44வது நிமிடத்தில் மறுக்கப்பட்டது.

இதனால் முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற நிலையில் நிறைவுற்றது.

பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் தொட்டந்து ஆக்கிரமிப்பு செலுத்திய மலேசியவுக்கு சீனாவும் கடும் போட்டியைக் கொடுத்தது.

ஆனாலும் நாச்சோ மெண்டஸ் வழி மலேசியா தனது இரண்டாவது கோலைப் போட்டு அதன் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் வழி நான்கு புள்ளிகளோடு JDT பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் வேளையில் செங்டு ரோங்செங் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)