புத்ராஜெயா, 17 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் அலுவலகப் பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் இன, மத பேதமின்றி அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தமது அன்பளிப்பை வழங்கிய டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து மதிய உணவையும் உட்கொண்டார்.
அதோடு, தீபாவளி கொண்டாட்டத்திற்காக தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]