Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சுங்கை பூலோ இந்தியர்களுக்கு 3,000 பரிசுக் கூடைகளை வழங்கினார் ரமணன் 

12/10/2025 05:38 PM

சுங்கை பூலோ, 12 அக்டோபர் (பெர்னாமா) - வசதி குறைந்தவர்களும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அத்தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களுக்கு 3,000 பரிசுக் கூடைகளை வழங்கினார்.

பெருநாளுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைக் கொண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் அப்பரிசுக் கூடை பி40 பிரிவைச் சேர்ந்தவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

காலத்திற்கு ஏற்ற இத்தகைய உதவிகளை மடானி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதோடு சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மடானி திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த உதவி அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

இன்று சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் வழங்கப்பட்ட இந்த பரிசுக் கூடையைச் சுற்றுவட்டார இந்தியர்கள் பெற்றுக் கொண்டதுடன் பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்துடன் இணைந்து, சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், கோத்தா டாமான்சாரா மற்றும் பாயா ஜாராஸ் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஐம்பது விழுக்காட்டு தள்ளுபடியில் மடானி விற்பனையையும் ஏற்பாடு செய்துள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.   

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)