Ad Banner
Ad Banner
 அரசியல்

78 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

11/12/2025 08:13 PM

சபா, டிசம்பர் 11 ( பெர்னாமா) --  இன்று சபா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ காட்ஸிம் எம் யஹ்யா முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 78 சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முதலில் முதலமைச்சரும் சுலமான் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர்-ரும் அவரைத் தொடர்ந்து முதலாவது துணை முதலமைச்சரும் சபா மாநில பொதுப்பணி மற்றும் உபகரண அமைச்சருமான குண்டசாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜோச்சிம் குன்சலாம் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மேலும், இரண்டாவது துணை முதலமைச்சரும் சபா மாநில நிதி அமைச்சருமான கரனான்சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மசிடி மஞ்சுன் மற்றும் மூன்றாவது துணை முதலமைச்சரும் சபா மாநில தொழில்துறை தொழில்முனைவோர் மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கடமாயின் சட்டமன்ற உறுப்பினர்டத்தோ இவான் பெனடிக் ஆகியோரும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதோடு, சபா மாநில அமைச்சரவை உறுப்பினர்களுமான மெம்பாகுட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர். முகமட் அரிபின் முகமட் ஆரிஃப், சுகுட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜேம்ஸ் ரதிப், கெமாபோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரூபின் பலாங், மெலாலாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜமாவி ஜாஃபர், சுகாவ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜாஃப்ரி அரிஃபின், அபாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நிஜாம் அபு டிடிங்கன் மற்றும் மாட்டுங்கோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜூலிடா மஜுங்கி ஆகிய எழுவரும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)