Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

காசாவுக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள்

12/10/2025 01:03 PM

காசா, 12 அக்டோபர் (பெர்னாமா) -- நாளை தொடங்கி காசாவில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவுக்கு திரும்புகின்றனர்.

காசா பொது பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகள் படி சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காசாவுக்குத் திரும்பியுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடங்கள், குப்பைகளுக்கு இடையே தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளின் எச்சங்களை பாதிக்கப்பட்ட மக்கள் தேடி வருகின்றனர்.

பலரின் வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டமாக இஸ்ரேலிய  பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பு ஒப்புக்கொண்டது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான கைதிகள் பரிமாற்றம் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், நாளை காலை தொடங்கி  பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் தலைவர் ஹொசாம் பட்ரான் தெரிவித்தார்.

நாளை எகிப்தில் நடைபெறவிருக்கும் அமைதி ஒப்பந்தத்தின் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ஹமாஸ் கலந்து கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]