கோலாலம்பூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- 2026ஆம் ஆண்டில் நாட்டின் பாரா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த மலேசிய பாராலிம்பிக் மன்றம் எம்.பி.எம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சிடம் இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை விண்ணப்பிக்கும்.
அண்மையில், துபாய், ஐக்கிய அரபு சிற்றரசில் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாராலிம்பிக் போட்டியில் 14 தங்கங்களை வென்றது உட்பட இவ்வாண்டு முழுவதும் பாரா விளையாட்டு வீரர்களின் செயல்திறன் சிறப்பாக இருந்ததைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை முன் வைக்கவிருப்பதாக அதன் தலைவர் டத்தோ மெகாட் டி. ஷரிமான் ஷஹாருடின் தெரிவித்தார்.
இன்று தேசிய விளையாட்டு மன்றம் எம்.ஸ்.என்னில் நடைபெற்ற AYPG விளையாட்டுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)