இங்கிலாந்து, டிசம்பர் 23 (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆட்டக்காரர்களை விற்கும் அல்லது வாங்கும் நடவடிக்கைகள் தொடங்கியதும் லீவர்பூல் நிர்வாகி ஆர்னே ஸ்லாட் புதிய தாக்குதல் ஆட்டக்காரரை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று டோட்டன்ஹாம்-க்கு எதிரான போட்டியில் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் அலெக்சாண்டர் இசக்-க்கு காலில் ஏற்பட்ட எலுப்பு முறிவைத் தொடர்ந்து செய்து கொண்ட அறுவை சிகிச்சையினால் அவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டர் இசக் மீண்டும் களத்திற்குத் திரும்புவதற்கான நிலை இன்னும் தெரியவில்லை என்றும் அவர் தற்போது AXA பயிற்சி மையத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் லீவர்பூல் இன்று காலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவித்தது.
ஏற்கனவே ஆப்பிரிக்கா கிண்ணத்தில் மஹமட் சலா இல்லாமல் தாக்கல் ஆட்டத்தின் மீதான அழுத்தம் அதிகரித்திருக்கும் வேளையில் ஸ்வீடன்-ஐ சேர்ந்த அலெக்சாண்டர் இசக் உம் பல மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பல தாக்குதல் ஆட்டக்காரர்கள் லிவர்பூலில் குறுகிய காலத்திற்கு அல்லது தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவான் டோனி தற்போது பிரொ சவுதி லீக்கில் அல் அஹ்லி அணியில் விளையாடுகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)