புத்ராஜெயா, 11 அக்டோபர் (பெர்னாமா) -- சரவாக், சமரஹானைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை, Influenza A தொற்றினால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வக சோதனைகளில், அக்குழந்தைக்கு Influenza A தொற்று இருப்பது காட்டினாலும் அடையாளம் காணப்பட்ட முதன்மை சிக்கலில் மூளை வீக்கத்தினால் ஏற்பட்ட வலிப்பே என்று சுகாதார அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
''ஆய்வக சோதனையில், Influenza A தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முக்கிய சிக்கல் மூளை வீக்கம். மூளைக்காய்ச்சலின் விளைவாக வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. இது வேறு பல கிருமிகளாலும் ஏற்படலாம். எனவே, Influenza A என்று உறுதியாகக் கூற முடியாது. தற்காலிக நோயறிதலில் அப்படி தான் கூறப்பட்டுள்ளது. எனவே, இறுதி நோயறிதலுக்காக காத்திருப்போம்'', என்றார் அவர்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு டாக்டர் சுல்கிஃப்ளி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)