Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பி.டி.பி.டி.என் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டம்

10/10/2025 09:19 PM

ஜாலான் பார்லிமன், 10 அக்டோபர் (பெர்னாமா)-- பி.டி.பி.டி.என் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டத்தின் மூலம் குறைந்த மாத வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 800 மாணவர்கள் பொது உயர்க்கல்விக் கழகம் ஐ.பி.டி.எ-வின் (IPTA) இலவச கல்வி வாய்ப்பைப் பெறுவர்.

''2026ஆம் ஆண்டு தொடங்கி 2705 ரிங்கிட்டிற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, இலவசமாக பி.டி.பி.டி.என் கல்வியை அரசாங்கம் வழங்கும். இது தைரியமான முன்னதாக சிந்திக்கப்படாத ஒரு தொடக்கமாகும்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம். 

குறைந்த மற்றும் நடுத்தர மாத வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இளங்கலை பட்டப்படிப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பி.டி.பி.டி.என்  கடனுதவியைத் திரும்பி செலுத்துவதலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.   

ஆண்டுக்கு ஒதுக்கிடப்படும் 9 கோடி ரிங்கிட் நிதியிலிருந்து கடன் பெறும் சுமார் 6,000 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று அன்வார் விளக்கினார்.  

இதனிடையே, பி.டி.பி.டி.என்  கடனுதவியைத் திருப்பிச் செலுத்தத் தவறி தற்போது வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்றும் அவர் விவரித்தார். 

--பெர்னாமா   

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பபு இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)