ஈப்போ, 06 அக்டோபர் (பெர்னாமா) - வடகிந்தா மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான காற்பந்து போட்டி சிறப்பான் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் பெயரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வட கிந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 21 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன.
வெற்றிகரமாக நடைபெற்ற இப்போட்டியை வடகிந்தா மாவட்ட்த் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழத்துடன் இணைந்து பேராக், வர்கா செஜாத்தி சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பதிகாரி டத்தோ ஆர்.சுரேஸ்குமார் இப்போட்டியைத் தொடக்கி வைத்தார்
விளையாட்டுத் துறையில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த மீண்டும் இவ்வாண்டு இப்போட்டியை நடத்துவதாக அதன் ஊற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். ஸ்டென்லி நெல்சன் கூறினார்
இபோட்டியில். ஆண்கள் பிரிவில் செட்டியார் தமிழ்ப்பள்ளி சாம்பியனாகவும், கிளேபாங் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தையும், அரசினர் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தையும் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவில், அரசினர் தமிழ்ப்பள்ளி சாம்பியனாகவும், செட்டியார் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தையும் மற்றும் நான்காவது இடத்தை கிளேபாங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
வெற்றிப் பெற்றவர்களுக்கு டத்தோ சுரேஷ் குமார், வணிகப் பிரமுகர் டத்தோஸ்ரீ எஸ். கேசவன் மற்றும் பேரா தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)