சிங்கப்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) - சிங்கப்பூர் கிரான்ட் ப்ரீ கார் பந்தயம்.
உலக வெற்றியாளர் மேக்ஸ் வெஸ்டெபனை வீழ்த்தி மெர்செடிஸ் அணியின் ஜோர்ஜ் ரூசல் வெற்றி வாகை சூடினார்.
5.4 வினாடிகள் வித்தியாசத்தில் வெஸ்டெபனை பின்னுக்குத் தள்ளிய பிரிட்டனின் ஜோர்ஜ், இப்பருவத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் இதன் வழி, ஃபார்முலா 1 போட்டியில் தமது ஐந்தாவது கிரான்ட் ப்ரீக்ஸ் வெற்றியையும் அவர் அடைந்துள்ளார்.
இதனிடையே, வெஸ்டெப இரண்டாவது இடத்திலும் எம்சி லாரென் அணியின் லன்டோ நோரிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
ஏழு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள ஃபெராரி அணியின் லெவிஸ் ஹமில்டன், 85.25 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து எட்டாவது இடத்தை மட்டுமே தக்கவைக்க நேர்ந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)