Ad Banner
Ad Banner
 பொது

ஆசியானின் அனைத்து உரையாடல் பங்காளிகளையும் மலேசியா அழைக்கும்

06/10/2025 05:59 PM

கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) -  நடுநிலைமை மற்றும் வட்டார மையக் கொள்கைகளுக்கு ஏற்ப ஆசியானின் அனைத்து உரையாடல் பங்காளிகளையும் விதிவிலக்கின்றி அழைக்க மலேசியா கடமைப்பட்டுள்ளது.

நாடுகளின் இருதரப்பு உறவுகள் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படவில்லை.

இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் 47-வது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு வெளியுறவு  துணை அமைச்சர் டத்தோ முஹமாட் அலாமின் அந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

 "ஆசியான் நடுநிலைமை மற்றும் மையத்தன்மைக்கு விதிவிலக்கு இல்லாமல்,  அனைத்து ஆசியான் உரையாடல் பங்காளிகளும் கலந்து கொள்ள நாம் அழைக்க வேண்டும். நமது அதிருப்தியை வெளிப்படுத்தப் பயன்படுத்திக் கொள்வோம். ஆசியான் மற்றும் அமெரிக்காவை வலுப்படுத்துவோம், பாலஸ்தீனத்தை அழிவு இனப்படுகொலையிலிருந்து விடுவித்து காசாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்," என்று டத்தோ முஹமாட் அலாமின் கூறினார்.

காசாவில் தற்போது நிலவும் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து மலேசியா மற்றும் ஆசியான் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தவும் அமெரிக்காவுடன் வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)