லடாக், செப்டம்பர் 25 (பெர்னாமா) -- இந்தியா, லடாக்கில் நடத்தப்பட்ட போராட்டங்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டாட்சி பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு வேலை ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட இப்போராட்டங்களில் பலர் காயமடைந்தனர்.
இப்போராட்டங்களால் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதால், லெ நகரில் கடைகள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
செப்டம்பர் 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்வலர் சொனம் வங்சுக்கின் "சினமூட்டும்" பேச்சுக்களால் போராட்டங்கள் தூண்டப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வங்சுக் தலைமையிலான போராட்டக்காரர்கள், பழங்குடிப் பகுதிகளைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க அனுமதிக்கும் லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று என்று கோருகின்றனர்.
இந்திய உள்துறை அமைச்சு 2023ஆம் ஆண்டு முதல் லடாக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.
அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தை அக்டோபர் 6 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)